கூர்மையான கண் பார்வையை அளிக்கும் பாலாடையின் நன்மைகள்…!!!

Author: Hemalatha Ramkumar
19 August 2022, 3:26 pm

பாலில் இருந்து எடுக்கப்படும் கிரீம் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதி என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. கிரீம் கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்ததாக இருந்தாலும், அதில் ஏராளமான நன்மைகளும் உள்ளன. உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் சிறந்த ஃப்ரெஷ் க்ரீமை எப்படி அனுபவிக்க முடியும்? இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து:
கிரீமில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் சில தாதுக்களிலும் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், கோலின் மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் இதில் உள்ளன.

நம் கண்களின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கும் வைட்டமின் ஏ இன்றியமையாதது. ஆரம்பகால மூளை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு கோலின் முக்கியமானது. கிரீம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவை ஆரோக்கியமான எலும்புகளுக்குத் தேவையான இரண்டு அத்தியாவசிய தாதுக்களாகும்.

இருப்பினும், இந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் உட்கொள்ள விரும்பினால், கிரீம் உங்கள் பிரதானமாக இருக்கக்கூடாது. ப்ரெஷ் கிரீமில் உள்ள பெரும்பாலான கொழுப்பு நிறைவுற்ற கொழுப்பிலிருந்து வருகிறது. அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பை அதிக கொலஸ்ட்ரால் அபாயத்துடன் இணைக்கும் பல ஆய்வுகள் உள்ளன. கிரீமை வழக்கமாக சாப்பிடுவது உங்கள் இடுப்பு பகுதியில் தசைகளை அதிகரிக்கும். ஆகவே இதனை மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!