தினமும் ஒரு கப் வால்நட்ஸ் உங்கள் ஆரோக்கியத்தில் நிகழ்த்தும் அதிசயம்!!!

Author: Hemalatha Ramkumar
29 March 2023, 10:42 am

வால்நட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அக்ரூட் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. வால்நட்ஸ் சாப்பிடுவது ஒரு நபரின் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அக்ரூட் பருப்புகள் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின் படி, குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த HDL அல்லது “நல்ல” கொழுப்பு அளவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. வால்நட்ஸில் நரம்பியல் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிக அளவு ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) இருக்கிறது. இதன் காரணமாக வால்நட் குடல் ஆரோக்கியத்தையும் இதய ஆரோக்கியத்தையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வால்நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வால்நட்களை தொடர்ந்து உட்கொள்ளும் நபர்களில் அதிக அளவு கோர்டோனிபாக்டர் பாக்டீரியா இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியம் தாவர சேர்மங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு பொறுப்பாகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக இருப்பதைத் தவிர, அக்ரூட் பருப்பில் ஆல்பா-லினோலெனிக் அமிலமும் உள்ளது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிர வால்நட்ஸ் வீக்கத்தை குறைக்கிறது, கொலஸ்ட்ரால் சமநிலையை மேம்படுத்தப்படுகிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் இருதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

தினமும் 7-14 அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது நன்மை பயக்கும். அதாவது, ஒரு நாளைக்கு 1 கப் வால்நட்ஸை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!