என்ன பண்ணாலும் தொண்டை வலி போக மாட்டேங்குதா… உங்களுக்கான சிம்பிள் ரெமடி இதோ!!!

Author: Hemalatha Ramkumar
29 March 2023, 6:29 pm
Quick Share

தொண்டை வலி மிகவும் கொடியது. தொண்டை வலி இருந்தால் உணவுகளை சாப்பிட முடியாது, எச்சில் கூட விழுங்க முடியாது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இந்த வீட்டு வைத்தியங்கள் விரைவில் நிவாரணம் தர உதவும்.

மஞ்சள் பால்:
தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பழமையான மருந்துகளில் மஞ்சள் ஒன்றாகும். இது தொண்டை வலி மற்றும் ஜலதோஷத்திற்கு அற்புதமாக செயல்படுகிறது. ஒரு கிளாஸ் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சவும். இதனை சூடாகவும், மெதுவாக விழுங்கவும்.

இஞ்சி டீ
தொண்டை வலியைக் குறைக்க ஒரு இயற்கை மற்றும் பயனுள்ள வழி இந்த தேநீர். வழக்கமான தேநீர் தயாரிப்பதைப் போலவே தேநீரை தயாரித்து, கூடுதலாக இஞ்சி சேர்க்கவும்.

எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் இது உங்கள் தொண்டை வலியை திறம்பட குணப்படுத்தும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் அதிக அளவு வைட்டமின் சி வழங்குகிறது. எலுமிச்சை தண்ணீரை தயாரிக்க, சூடான நீரில் எலுமிச்சையை பிழிந்து, நீங்கள் விரும்பினால் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீர் சூடாக இருக்கும் போது குடிக்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 367

0

0