வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை ஸ்க்ரப்பாக பயன்படுத்தி பார்ப்போம் வாங்க!!!

Author: Hemalatha Ramkumar
21 May 2022, 5:41 pm
Quick Share

உங்கள் முகம் பொலிவில்லாமல் இருக்கின்றதா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஸ்கிரப் செய்து உங்கள் முகத்தை
பொலிவடைய செய்யுங்கள்.

*வெயிலின் தாக்கத்தினால் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால். சருமத் துளைகள் அடைத்துக் கொள்ளும். இதனால் முகமானது பொலிவிழந்து வறண்டு, கருத்துப் போகும். இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பதற்கு ஸ்கிரப்பிங் முறையே உதவும்.

*உப்பு ஸ்கிரப்பிங்:
உப்பு ஸ்கிரப்பிங் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்பதுடன், இறந்த செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உப்பு ஸ்கிரப்பிங் செய்வதன் மூலம் சருமம் வழுவழுப்பாக மாறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங் முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உடம்பு வலியால் தவிப்பவர்கள் குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளித்தால், உடலவலி நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

உப்பை சிறிதளவு எடுத்து முகத்தில் மேலும், கீழுமாக ஸ்கிரப் செய்யது முகத்தை கழுவ வேண்டும். உப்புடன், காபித்தூள் கலந்தும் ஸ்கிரப் செய்யலாம். இப்படி செய்வதால் செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும்.
தக்காளியுடன் உப்பு கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்யும் போது முகம் பளிச்சென்று காணப்படும்.

ரவை மற்றும் தயிர் ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரிமஞ்சள் ஒரு சிட்டிகை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தூசுகள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

ரவை மற்றும் கற்றாழை ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து பத்து நிமிடம்
முகத்தில் தேய்த்து நன்றாக ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ரவை மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
ரவை ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாறு இரண்டு டேபிள்ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் நன்றாக ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாகவும், பொலிவுடன் காணப்படும்.

சர்க்கரை ஸ்கிரப்பிங்:
சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
சர்க்கரை மற்றும் தக்காளி சாறு இரண்டையும் நன்றாக முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். சர்க்கரை வைத்து ஸ்கிரப்பிங் செய்வதால் சருமம் வறண்டு போவதை தடுக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ‌சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தரும். முகத்தில் ஏற்படக்கூடிய கருமை மற்றும் சுருக்கங்களை போக்கி, இளமையான தோற்றத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.

ஓட்ஸ் ஸ்கிரப்பிங்:
ஓட்ஸ் இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த ஓட்ஸ் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து பின்பு முகத்தில் பத்து நிமிடம் ஸ்கிரப் செய்து, 15 நிமிடம் காயவைத்து பிறகு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் தக்காளி ஸ்கிரப்பிங்:
ஓட்ஸ் இரண்டு டேபிள்ஸ்பூன், தக்காளி சாறு ஒரு டேபிள்ஸ்பூன், கடலைமாவு ஒரு டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, கற்றாழை ஜெல் ஒரு டேபிள்ஸ்பூன் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் ஸ்கிரப் செய்யலாம். இந்த கலவையை ஃபேஸ் பேக்காவும் (face pack) முகத்தில் அப்ளை செய்யலாம்.

இப்படி வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம் முகத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

Views: - 743

0

0