உணவை இந்த மாதிரி சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
25 April 2023, 10:53 am
Quick Share

மைண்ட்ஃபுல் ஈட்டிங் என்று சொல்லப்படும் கவனத்துடன் உணவு உண்பது என்பது நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நடைமுறையாகும். உணவு சாப்பிட்டவுடன் நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் உடல் சுவை, திருப்தி மற்றும் முழுமை பற்றி அனுப்பும் சமிக்ஞைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருப்பது போன்றவை இதில் அடங்கும். இதில் உணவை வாங்குதல், தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் போன்றவையும் அடங்கும்.

கவனத்துடன் சாப்பிடும் பழக்கம் பிரபலமடைந்து வருகிறது. ஏனென்றால் வேலை செய்வது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேறு ஏதாவது செய்யும் போது சாப்பிடுவது ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில், இதனால் ஒருவர் பசியில்லாமல் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை உருவாக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்ய, கவனச்சிதறல்களை அகற்றி, உங்கள் முழு கவனத்தையும் உணவு மீது செலுத்தி சாப்பிடுவது முக்கியம். முதலில் ஒரு குறுகிய காலத்திற்கு கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பின்னர் அதிலிருந்து படிப்படியாக அதே பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

உணவு உண்ணும் போது வேறு வேலைகள் செய்வதை நிறுத்துங்கள். டிவியை அணைத்துவிட்டு மொபைலை கீழே வைக்கவும். முதலில் குறுகிய காலத்திற்கு கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்வது சிறந்தது. அந்த நேரத்தில் உணவின் மீது உங்கள் கவனத்தை எவ்வாறு திருப்புவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பசி இல்லாவிட்டாலும் ஒரு சில நேரங்களில் நிறைய நேரம் சாப்பிடுவோம். கவனத்துடன் உண்ணும் போது, நீங்கள் உங்கள் பசியை அளவிடுவீர்கள். இது அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 260

0

0