மருத்துவ பலன்களில் பட்டயைக் கிளப்பும் பட்டை!!!

Author: Hemalatha Ramkumar
24 April 2023, 7:46 pm
Quick Share

பட்டை என்பது ஒரு மாசாலா பொருள் என்பதைக் காட்டிலும் அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. நமது சமையல் அறையில் உள்ள அஞ்சரை பெட்டியில் எப்போதுமே பட்டை இருக்கும். இதனை வாசனைக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம் என்று இதுனால் வரை நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால் அது தவறு.

மஞ்சளை போல பாரம்பரியமாக பட்டை பயன்படுத்தப்படாமல் போனாலும் இந்த மாசாலா பொருளின் ஆற்றும் குணத்தை நம்மால் மறுக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த பட்டை உணவின் சுவையை கூட்டுவதில் வல்லமை கொண்டது. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை மேம்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

இது ஒரு அருமையான வீட்டு வைத்திய மருந்து. ஃபங்கள் மற்றும் பாக்டீரியாவினால் ஏற்படும் இன்ஃபெக்ஷனில் இருந்து நம்மை காக்கும். உள்வீக்கத்தை குறைக்கும் தன்மை வாய்ந்தது. பட்டையை கொண்டு மூலிகை டீ தயாரித்து பருகி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ஆராய்ச்சியாளர்களை பொருத்த வரையில் இருக்கக் கூடிய இருபத்தி ஆறு மசாலா பொருட்களில் பட்டை தனது அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்டுகளின் அளவால் முதலிடத்தை பிடிக்கிறது. சின்னமோமம் வெறம் (Cinnamomum Verum) மரத்தின் பட்டை தான் இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

பட்டையில் உள்ள சிறந்த பொருட்களான சின்னமிக் ஆசிட், சின்னமேட் மற்றும் சின்னமால்டிஹைட் தான் இதற்கு மருத்துவ பயன்களை தருகிறது. மேலும் இதில் ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் பீனாலிக் காம்பௌன்டுகளும் உள்ளது. இப்போது பட்டையின் முக்கிய மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்த பட்டை வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பட்டையில் உள்ள ஆரோக்ஸின்டின், ஹைப்போலேட்டின், குவர்சிட்டின், நாப்ஹாலியம், ஹிபுஃபோலின், ஹெஸ்பெரிடின் மற்றும் காஸிபினின் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி தன்மையை பட்டைக்கு அளிக்கிறது. நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை குறைத்து வீக்கத்தை குறைக்கிறது. காஸ்ட்ரிடிஸ் பிரச்சனையை போக்குகிறது.

ஆன்டிமைக்ரோபியல் தன்மை கொண்ட பட்டை வைரல் மற்றும் பாக்டீரியல் இன்ஃபெக்ஷனில் இருந்து நம்மை காக்கும். இது மட்டும் இல்லாமல் பட்டையில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபாராசிடிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளது. பட்டையின் குணத்தை பெருவதற்கு அதனை டீயாக செய்து பருகி வாருங்கள். மேலும் ஃபங்கள் இன்ஃபெக்ஷனிற்கு பட்டை எண்ணெய் பயன்படுத்தலாம்.

இரத்தத்தில் அதிக அழுத்தம் இருப்பவர்கள் பட்டையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இரத்த குழாய்களை விரிவாக்கி அதன் மூலம் இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது.

மூளையை பாதிக்கும் அல்சிமெர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய் ஏற்படாமல் பட்டை தடுக்கும். மூளையில் உள்ள அணுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதன் செயல்திறனை பாதுகாக்கிறது. ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த பட்டை மூளை மற்றும் உடலின் ஏஜிங்கை தடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 367

0

0