கெட்ட கொழுப்பை முழுவதுமாக கரைக்கும் கொத்தமல்லி!!!

Author: Hemalatha Ramkumar
29 May 2022, 6:44 pm

கொத்தமல்லி என்பது நார்ச்சத்து, மாங்கனீசு, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் அற்புதமான ஆதாரமாகும்.

மேலும், கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் புரதம் நிறைந்துள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தியாமின், நியாசின் மற்றும் கரோட்டின் ஆகியவை சிறிய அளவில் உள்ளன. கொத்தமல்லி இலைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்:-
1. கொத்தமல்லி கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது.
2. செரிமான அமைப்புக்கு மிகவும் நல்ல உணவான கொத்தமல்லி கல்லீரல் செயல்பாடுகளையும் குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
3. சர்க்கரை நோயாளிகளுக்கு கொத்தமல்லி நல்லது. இது இன்சுலின் சுரப்பைத் தூண்டி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
4. இதில் உள்ள வைட்டமின் கே அல்சைமர் நோய் சிகிச்சைக்கு நல்லது.
5. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, நுரையீரல் மற்றும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
6. கொத்தமல்லியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால்தான் கீல்வாதம் போன்ற அழற்சி நோய்களுக்கு எதிராக இது சிறந்தது.
7. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள் வாய் புண்களை குணப்படுத்த உதவுகிறது.
8. கொத்தமல்லி கண்களுக்கு நல்லது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் நோய்களைத் தடுக்கிறது. கான்ஜுன்க்டிவிடிஸ் சிகிச்சையில் இது ஒரு நல்ல தீர்வாகும்.
9. கொத்தமல்லி விதைகள் குறிப்பாக மாதவிடாய் ஓட்டத்திற்கு நல்லது.
10. நரம்பு மண்டலத்தை மேம்படுத்த இது மிகவும் நல்ல மூலிகை. நினைவாற்றலைத் தூண்டக் கூடியது.
11. கொத்தமல்லி இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.

கொத்தமல்லி பொதுவாக சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. அளவோடு தான் சாப்பிட வேண்டும். இருப்பினும், சிலருக்கு ஒவ்வாமை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படலாம். எனவே உங்கள் மருத்துவரை அணுகவும்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!