வாய் வழியா மூச்சு விடுறதால ஏதும் பிரச்சினை ஏற்படுமா???

Author: Hemalatha Ramkumar
13 November 2022, 12:20 pm

புதிதாகப் பிறந்த குழந்தையால் வாய் வழியாக சுவாசிக்க முடியாது. இருப்பினும், 6 மாதத்திற்கு பிறகு, சுவாசிக்க மற்றொரு வழி இருப்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். உங்கள் வாய் வழியாக சுவாசிப்பது நன்றாக வேலை செய்தாலும், நீண்ட காலத்திற்கு அவ்வாறு செய்வது அது நமக்கு பெருமளவில் தீங்கு விளைவிக்கும்.

உங்கள் முகம் மாறுகிறது
நீங்கள் உங்கள் வாய் வழியாக சுவாசித்தால், உங்கள் முகம் அதன் கட்டமைப்பை மாற்றி முன்னோக்கி மற்றும் கீழ்நோக்கி வளர்வதை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வாய் வழியாக சுவாசிக்கும்போது, ​​உங்கள் தாடை மற்றும் கன்னங்கள் குறுகிவிடும். இது, உங்கள் மூக்கின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நீங்கள் அதிகமாக குனிய ஆரம்பிக்கிறீர்கள்
நீங்கள் உங்கள் வாய் வழியாக சுவாசித்தால், உங்களை அறியாமலேயே நீங்கள் தலையை முன்னோக்கி சாய்ப்பீர்கள். உங்கள் தோள்கள் சரிய ஆரம்பிக்கும். இதன் விளைவாக, நீங்கள் ஒரு சாய்ந்த தோரணையைப் பெறுவீர்கள். இது உங்கள் காற்றுப்பாதைகளைத் திறப்பதற்கான ஒரு வழியாக உருவாகிறது.

உங்கள் பற்கள் பாதிக்கப்படுகின்றன
வாய் வழியாக சுவாசிப்பது உங்கள் பற்களின் சீரமைப்பை எதிர்மறையாக பாதிக்கிறது. வாய் வழியாக சுவாசிக்க விரும்பும் பல குழந்தைகளுக்கு வளைந்த பற்கள் உருவாகிறது. மேலும் உதடு தோரணை மற்றும் நாக்கு நிலையும் மாறுகிறது. மேலும் இதனால் பிரேஸ்களை அணிய நேரிடும்.

தூங்குவதில் சிரமம் ஏற்படுகிறது
குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு உங்கள் உடலில் நுழைகிறது. இதன் விளைவாக, உங்கள் உடல் உறுப்புகளில் பெரும்பாலானவை பாதிக்கப்படுகின்றன. தவிர, நீங்கள் குறட்டை விடுவதற்கும், உமிழ்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது. அத்துடன் நாள்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மூக்கு வழியாக சுவாசிக்க உதவுவதற்காக, இரவில் உங்கள் வாயை டேப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  • vijay character name in jana nayagan leaked in internet ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?