போதுமான அளவு சாப்பிட்ட பிறகும் பசி ஏற்படுகிறதா…அதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
23 March 2023, 1:56 pm
Quick Share

Images are © copyright to the authorized owners

Quick Share

பசிக்கும் போது நாம் சாப்பிடுகிறோம். ஆனால் சாப்பிட்ட பின்னரும் அதிகப்படியான பசி எடுத்தால் என்ன செய்வது? இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா…? பசி என்பது உங்கள் உடலுக்கு உணவு தேவை என்பதற்கான சமிக்ஞையாகும். ஆனால் தேவையான கலோரிகளை உட்கொண்ட பிறகும் ஏன் பசிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தவறான நேரத்தில் தவறான உணவுகளை உண்பதே இதற்குக் காரணம். எனவே, உங்களுக்கு தொடர்ந்து பசி எடுத்தாலோ அல்லது அதிகமாக உணவு உண்ண வேண்டி இருந்தாலோ, பசிக்கான உண்மையான காரணத்தையும் அதைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் இந்த பதிவின் மூலம் புரிந்துகொள்வோம். சாப்பிட்ட பிறகும் பசி ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன.

நீங்கள் மிக விரைவாக சாப்பிடும்போது, ​​நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்பது உங்கள் மூளைக்கு தெரியாது. ஆகவே, முடிந்தவரை மெதுவாக சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் உடலுக்கு உணவு தேவைப்படுகிறது மற்றும் ஏங்குகிறது. நன்கு சமநிலையான உணவில் அனைத்து மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் அடங்கும். சாப்பிட்ட பிறகு பசி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து இல்லாதது. இதனாலும் அடிக்கடி பசி ஏற்படலாம்.

நமது உடலுக்குப் புதிய உணவுகளை உண்ணும் போது, நமது உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு புதிய உணவை அறிமுகப்படுத்தும் போது, ஒரு சிறிய அளவு தொடங்கி படிப்படியாக அதை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

உணவு சாப்பிட்ட பிறகு ஏற்படும் பசியை எப்படி தவிர்க்கலாம்?
*புரதத்தைச் சேர்க்கவு

*அதிக காய்கறிகளை உட்கொள்ளுங்கள்

*போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 123

0

0