இத ஃபாலோ பண்ணா அறுபது வயதிலும் தெளிவான பார்வையை எளிதில் பெறலாம்!!!

Author: Hemalatha Ramkumar
23 March 2023, 10:08 am
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

நம் கண் பார்வையில் எந்த அசௌகரியமும் ஏற்படாத வரை, நாம் அதைபபற்றி யோசிப்பதே இல்லை. ஆனால் உண்மையில், நல்ல கண் பார்வை இருந்தாலும் கூட, ஒரு சில விஷயங்களை பின்பற்றுவது சில கண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். இயற்கையான முறையில் கண்களை பாதுகாக்க உதவும் சில டிப்ஸ்களை இந்த பதிவில் காண்போம்.

நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் கண்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கண்களுக்கு ஏற்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சேர்க்க உங்கள் உணவை மேம்படுத்துவது முக்கியமானது.

ஆரஞ்சு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ப்ரோக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, பச்சை பீன்ஸ் மற்றும் காலே போன்ற காய்கறிகளும் கண்களுக்கு நல்லது.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். போதுமான நீர் பருகுவதும் முக்கியம்.

புகைபிடித்தல் உங்கள் நுரையீரலுக்கு மட்டும் தீங்கானது அல்ல – இது பல கண் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். கண்புரை, பார்வை நரம்பு சேதம் மற்றும் மாகுலர் சிதைவு ஆகியவை இதில் அடங்கும். ஆகவே, புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

பெரும்பாலான மக்கள் வசதிக்காக அல்லது ஃபேஷனுக்காக சன்கிளாஸ்களை அணிவார்கள். அவை சூரியனின் புற ஊதா (UV) கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன.
சன்கிளாஸ்கள் வாங்கும் போது, UVA மற்றும் UVB கதிர்வீச்சு இரண்டிலும் 99 முதல் 100% வரை தடுக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குங்கள்.

கணினிகள், டேப்லெட்டுகள், தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளியானது கண்களுக்கு மோசமானது. பொதுவாக 20 நிமிடங்களுக்கு மேல் திரையை உற்றுப் பார்ப்பது கண் சோர்வு, தலைவலி மற்றும் பிற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட நேரம் கணினியை உற்றுப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு சிறிய இடைவெளி எடுப்பது நல்லது. திரையை கண் மட்டத்தில் வைத்திருப்பதும் புத்திசாலித்தனமானது. எனவே நீங்கள் பார்ப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. உங்களிடம் கண்ணாடிகள் அல்லது கான்டாக்ட் லென்சுகள் இருந்தால், அவற்றை அணிய மறக்காதீர்கள்.

நாள் முழுவதும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது உங்கள் கண்களில் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் மற்றும் பிற பாக்டீரியாக்களின் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 90

0

0