நிறைய நட்ஸ் சாப்பிட்டா இதெல்லாம் கூட நடக்குமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
10 November 2022, 1:21 pm
Quick Share

நட்ஸ் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சத்தானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புரோட்டீன் நிறைந்த, நட்ஸ் தினமும் சாப்பிடுவது பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய்களைத் தடுக்கிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் விருப்பமாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல், அவை நமது ஆற்றலை அதிகரிக்க உதவுவதோடு நமது நீண்ட ஆயுளிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

நட்ஸ் என்பது உணவின் சுவையை அதிகரிக்கிறது. இருப்பினும், இவற்றை அதிகமாக உண்பது நம் ஆரோக்கியத்தில் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது என்ன மாதிரியான விளைவுகள் என்பது குறித்து பார்ப்போம்.

எடை அதிகரிப்பு:
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது நட்ஸ் ஒரு சிறந்த சிற்றுண்டி விருப்பமாகும். உணவுக்கு இடையில் சாப்பிடுவதால், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம். இருப்பினும், இதனை அதிகமாகச் சாப்பிடுவது எடை கூடுவதற்கு வழிவகுக்கும். ஏனென்றால், நட்ஸ் வகைகளில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு இலக்கை காலி செய்யலாம்.

வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினை:
அதிகப்படியான நட்ஸ் சாப்பிட்ட பிறகு வீக்கம் மற்றும் வாயு போன்றவற்றை நீங்கள் அனுபவித்து இருக்கலாம். பெரும்பாலான பருப்புகளில் பைட்டேட்ஸ் மற்றும் டானின்கள் போன்ற கலவைகள் இருப்பது ஜீரணித்தலை கடினமாக்குகின்றன. நட்ஸ் வகைகளில் பல்வேறு வகையான கொழுப்புகள் உள்ளன. இது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

நச்சுத்தன்மை:
சில குறிப்பிட்ட பருப்புகளை அதிகமாக உட்கொள்வதும் உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். பாதாம், ஜாதிக்காய், பிரேசில் பருப்புகளை உட்கொள்ளும் போது ஒருவர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக சாப்பிடுவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பாதாம் பருப்பில் ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளது. இது சுவாசப் பிரச்சனை, நரம்புத் தளர்ச்சி மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். பிரேசில் பருப்புகளை அதிகமாக சாப்பிடுவதால் செலினியம் என்ற தாதுப்பொருளின் அதிகரிப்பு ஏற்படலாம்.

தினமும் எத்தனை நட்ஸ் சாப்பிடலாம்?
நட்ஸ் என்பது டேஸ்டாக இருப்பதால் அதனை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது எளிது. இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவுகளை கடைப்பிடிப்பது முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் (42 கிராம்) மட்டுமே சாப்பிட வேண்டும்.

Views: - 343

0

0