மெடிக்கல் கடையாக திகழும் நோய் தீர்க்கும் சப்போட்டா பழம்!!!

Author: Hemalatha Ramkumar
12 May 2022, 4:16 pm
Quick Share

நாம் சாப்பிடக்கூடிய சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளும், சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ளதா!

சப்போட்டா பழம் எப்போதும் கடைகளில் இருப்பதில்லை. சப்போட்டா பழம் ஒரு பருவ கால பழம் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. அந்தந்தப் பருவ காலங்களில் மட்டுமே கிடைக்கும். சப்போட்டா பழத்தில் சக்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளது.

சப்போட்டா பழ நன்மைகள்:
சப்போட்டா பழம் மிகவும் எளிதாக செரிமானம் ஆகும். இந்த பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் நம் உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. சப்போட்டா பழத்தில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. நல்ல சுவையான, ஆரோக்கியமான பழமாகும்.

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது . சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் , வைட்டமின்களும் இரத்த நாளங்களை சீராக வைத்திருக்கும் குணம் உடையவை.

சப்போட்டா பழ ஜுஸ் குடிப்பதால் கோடையில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை குறைத்து, தாகத்தை தணிக்கும் தன்மை உடையது. கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இப்படி சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே, சப்போட்டா பழம் கிடைக்கும் போது சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள்:

*புரதம் – 1.0 கிராம்,

* கொழுப்பு – 0.9கிராம்,

* மாவுப் பொருள் – 21.4கிராம்,

* பாஸ்பரஸ் – 27.0மி.கி,

*நார்ப்பொருள் – 2.6கிராம்

*இரும்பு சத்து – 2.0மி.கி

*கால்சியம் – 2.0மி.கி

* நியாசின் – 0.02மி.கி

* வைட்டமின் சி – 6.1மி.கி

*தரோட்டின் – 97 மைக்ரோ கிராம்

*ரைபோஃபிளோவின் – 0.03 மி.கி
இவ்வளவு சத்துக்களும் நாம் சாப்பிடக்கூடிய நூறு கிராம் சப்போட்டா பழத்தில் உள்ளது.

சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:

*சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக ‌இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தும்.

*சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் ஏற்படாது.

*சப்போட்டா பித்தத்தை போக்கக்கூடியது. தினமும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் மேனி பளபளப்பாக இருக்கும்.

*இரவில் தூங்க செல்லும் போது ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

*மூலநோய் மற்றும் குறிப்பாக இரத்த மூலநோய் உள்ளவர்களுக்கு சப்போட்டா ஒரு இயற்கை மருந்தாகும்.

*சப்போட்டா பழ ஜுஸ் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் சளி பிடிக்காது.

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை அதிக அளவு சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*சப்போட்டா பழத்துடன், தேயிலைச்சாறும் சேர்த்து பருகினால் இரத்தபேதி குணமாகும்.

* சப்போட்டா பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

* குழந்தைகளுக்கு சப்போட்டா பழமாகவோ அல்லது சப்போட்டா பழக்கூழ் போன்றோ கொடுத்தால் மிகவும் நல்லது.

இவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ள சப்போட்டா பழத்தை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

Views: - 1269

0

0