சோர்வா இருக்கும் போது இத குடிச்சா போதும்… அப்படி ஒரு எனர்ஜி கிடைக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
12 May 2022, 5:27 pm
Quick Share

நிம்மதியான தூக்கத்திற்குப் பிறகும், பலர் சோர்வாகவும் எழுந்திருப்பதுண்டு. சில சமயங்களில், நாள் முழுவதும் கூட அந்த சோர்வு உணர்வு தொடரலாம். இது ஒருவருக்கு ஆற்றல் குறைவதைக் குறிக்கிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான தீர்வு ஒன்று இந்த பதிவில் உள்ளது. இது நாள் முழுவதும் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்களை முழுதாக திருப்திப்படுத்தவும் உதவும்.

எனர்ஜி குறைவாக இருப்பதாக தோன்றும் போதெல்லாம் இந்த மில்க் ஷேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம். இது ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் சக்திவாய்ந்த கலவையாகும்.

இதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
*1 டீஸ்பூன் – சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் அடங்கிய விதை கலவை
*தண்ணீர்
*2 – அத்திப்பழம் அல்லது பேரிச்சம்பழம், 10 நிமிடம் ஊறவைத்தது
5 – பாதாம், இரவு முழுவதும் ஊறவைத்தது
150 மில்லி – பசும்பால்

முறை:
*மேலே கூறப்பட்டுள்ள விதை கலவையை தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
*ஒரு பிளெண்டரில் அவற்றை சேர்க்கவும்
*ஊறவைத்த பாதாம் பருப்புடன் ஊறவைத்த அத்திப்பழம் அல்லது பேரீச்சம்பழத்தையும் சேர்த்து அரைக்கவும்.
* 150 மில்லி பால் சேர்த்து, மேலும் அரைத்து ஒரு டம்ளரில் ஊற்றி பருகி
மகிழுங்கள்!

நன்மைகள்:-
*ஆளி விதைகள் – அதிக நார்ச்சத்து, ஒமேகா 3 கொண்டது.
*சூரியகாந்தி விதைகள் – உங்கள் கொழுப்பைக் குறைக்கிறது, மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது.
*பூசணி விதைகள் – வைட்டமின் கே, ஈ, பி ஆகியவற்றின் சிறந்த ஆதாரம்.
*அத்திப்பழம் – நார்ச்சத்து, கால்சியம், வீக்கத்தைக் குறைத்தல், மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் நல்ல ஆதாரம்.
*பேரிச்சம்பழம் – நார்ச்சத்து, இயற்கையான இனிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது.

Views: - 698

1

0