நெய் அதிகமா சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்சினை கூட வருமா…???
Author: Hemalatha Ramkumar26 செப்டம்பர் 2022, 12:59 மணி
நெய் சேர்த்து உணவுகளை சாப்பிடுவது மிகவும் ருசியை அதிகரிக்கும். அதோடு நெய் என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். ஏனெனில் நெய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதே போல் உடலையும் பலப்படுத்துகிறது. இருப்பினும், நெய்யை உண்பதால் ஒரு சில தீமைகளும் உள்ளன.
நெய்யால் ஏற்படும் தீமை:–
* நெய்யில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆனால், வைட்டமின் ஏ அதிகமாக உட்கொள்வதால் தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவை ஏற்படுவதோடு, சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
* நெய்யை அதிகமாக உட்கொள்வது உடலில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொழுப்பின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அவற்றில் அதிக அளவு இதய நோய்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
* நெய்யை அதிகமாக உட்கொள்வதால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
* நெய் அதிகமாக உட்கொண்டால் உடல் சூடு அதிகரிக்கும்.
* தேனை நெய்யுடன் சேர்த்துப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது உடலை எதிர்மறைமயாக பாதிக்கக்கூடும்.
0
0