இதென்ன கொடுமையா இருக்கு… திங்கட்கிழமைல தான் அதிக ஹார்ட் அட்டாக் நடக்குதா… ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 October 2024, 12:12 pm

கடந்த ஒரு சில வருடங்களாகவே ஹார்ட் அட்டாக் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படும் இறப்புகளும் ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எந்த சமயத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும் தொடர்ந்து திங்கள்கிழமைகளில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்து வருவதாக அறிக்கைகளில் சொல்லப்பட்டு வருகிறது. பிற நாட்களை ஒப்பிடும்போது திங்கட்கிழமையில் மட்டுமே 13 சதவீதம் ஹார்ட் அட்டாக்குகள் ஏற்படுவதாக பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திங்கட்கிழமை காலையில் அதிக ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. எனவே இந்த சமயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பிற நாட்களுடன் ஒப்பிடும்போது திங்கள்கிழமைகளில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது அதிகரிப்பது புள்ளி விவரங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இது “ப்ளூ மண்டே” (Blue Monday) என்ற பெயரை பெற்றுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். 

ப்ளூ மண்டே என்றால் என்ன?

திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் 10 மணி வரை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இது வெறும் ஒரு மதிப்பீடே தவிர இது குறித்த கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது. திங்கள்கிழமை காலையில் நாம் எழும்பொழுது நம்முடைய ரத்தத்தில் கார்டிசால் மற்றும் பிற ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நம்முடைய தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை உருவாக்கும் சர்க்காடியன் ரிதம் ஆகும். நிபுணர்களை பொறுத்தவரை தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியானது நம்முடைய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

திங்கட்கிழமை காலைகளில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான காரணம் என்ன? 

பெரும்பாலான நபர்கள் வார இறுதி நாட்களில் இரவு தாமதமாக தூங்குவார்கள். ஒரு சிலர் திரைப்படங்களுக்கு செல்வார்கள், இன்னும் சிலர் வீக் எண்டுகளில் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். இதனால் வார நாட்களுடன் ஒப்பிடுகையில் வீக்கெண்டில் தூங்குவதற்கு தாமதமாகும். இதனால் காலை தாமதமாக எழுவார்கள். 

இந்த மாற்றங்கள் உங்களுடைய சர்க்காடியன் ரிதத்தை பாதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று போதுமான அளவு தூக்கம் இல்லாத காரணத்தால் ஒரு சிலர் ‘சோசியல் ஜெட் லாக்’ காரணமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, கார்ட்டிசால் அளவுகளும் உயர்கிறது. இதுவே ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். எனவே வார நாட்களாக இருந்தாலும் சரி வார இறுதியாக இருந்தாலும் சரி ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது மற்றும் ஒரே நேரத்தில் எழுவது மிகவும் அவசியம். 

இதையும் வாசிக்கலாமே: ஹீமோகுளோபின் அதிகமா இருக்குறதும் பிரச்சினை தான்… ஏன்னு தெரிஞ்சுக்குவோமா…!!!

தூக்கம் என்பது நம்முடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று. நாம் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகள் கூட நம்முடைய உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கொண்டு விடலாம். எனவே ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் லேசாக கருதாமல் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!