பனங்கற்கண்டு பயன்படுத்தி இவ்வளோ கை வைத்தியம் இருக்கா???

Author: Hemalatha Ramkumar
25 May 2023, 10:33 am
Quick Share

பனை மரத்தில் இருந்து நமக்கு பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற ஏராளமான நன்மை தரும் பொருட்கள் கிடைக்கிறது. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு சுவையுடைய உணவு பொருளாகும். உணவில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

நமது உடலில் நோய்கள் எதுவும் வராமல் தடுக்க நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பனங்கற்கண்டு, முந்திரி பருப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது கடுக்காய் பொடி சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்குவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், நெஞ்சுசளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

ஞாபக மறதி உள்ளவர்கள் பனங்கற்கண்டு, சீரகம் மற்றும் சிறிதளவு அகத்திக்கீரை சாறு ஆகியவற்றை சேர்த்து இரவில் உறங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகள் இதை சாப்பிடுவதால் அவர்களுக்கு மூளை வளர்ச்சி அதிகரித்து நினைவுத்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் சூட்டை தணிப்பதற்கு பனங்கற்கண்டு பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டால் ஏற்படும் நீர் சுருக்கு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம், கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், அரை ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு சுக்கு ஆகியவற்றை அரைத்து சாப்பிட்டு வந்தால் மழைக்காலங்களில் ஏற்படும் தொண்டை கட்டு மற்றும் தொண்டை வலி ஆகியவை குணமாகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் சிறிதளவு சீரகம், சோம்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை போக்கலாம்.

ஆக்சாலிக் அமிலம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. 10 மில்லி அளவிற்கு முள்ளங்கி சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு இருமுறை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகக் கல் கரைக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று புண் ஆகியவை குணப்படுத்தப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வைட்டமின் சி குறைவால் பல் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை குணப்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 503

1

0