இத சாப்பிட்டா உடல் எடை குறையும் என்று பலருக்கு தெரியும்… ஆனா எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

Author: Hemalatha Ramkumar
24 May 2023, 6:43 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

கொள்ளு என்பது சிறுதானிய பயிறு வகைகளில் ஒன்றாகும். கொள்ளு பயிரில் ஏராளமான சத்துக்கள் மற்றும் பயன்கள் அடங்கியுள்ளன. இந்த கொள்ளினை வறுத்தோ அல்லது அவித்தோ அல்லது ரசம் வைத்தோ சாப்பிடுவதால் நம் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

கொள்ளு ரசம் அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும். சுவாசத் தொந்தரவு நீங்கும்; காய்ச்சலையும் கட்டுப்படுத்துகிறது.

உடலில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. இந்த வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே நோய் தொற்றில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

கொள்ளு பயரில் இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரதம் ஆகியவை அதிகமாக உள்ளது. இருக்கின்ற தானியங்களிலேயே அதிகமான கால்சியம் மற்றும் புரதம் ஆகியவற்றை கொண்டுள்ள தானியம் கொள்ளு ஆகும். நம் உடலில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் இதில் அதிகமாக அடங்கியுள்ளது. திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.

உணவில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும். இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கக்கூடியவை. 50 கிராம் அளவு கொள்ளு பயிரை நன்றாக ஊற வைத்து வெறும் வயிற்றில் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக குறையும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. கொள்ளு இரத்தத்தில் உள்ள குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாகும்.

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க பெரிதும் உதவுகின்றது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 46

0

0

Leave a Reply