ஃபேஷியல் ஹேர் பிரச்சனைக்கு தீர்வு தருவதாக வைரலாகும் புதிய ஹேக்…!!!

Author: Hemalatha Ramkumar
27 November 2024, 6:39 pm

எல்லா பெண்களும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது முகத்தில் முடி வளரும் ஒரு சவாலான சூழலை அனுபவித்திருக்க கூடும். எத்தனை விதமான முறைகளை முயற்சி செய்திருந்தாலும் சரி, முடி வளர்ச்சி என்பது அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது. எனினும் வேக்சிங், திரெட்டிங் அல்லது லேசர் போன்ற தற்காலிகமான தீர்வுகளை நீங்கள் கண்டுபிடித்து இருக்கலாம். எனினும் இந்த மாதிரியான முறைகளில் பல்வேறு அசௌகரியங்கள் உள்ளன. உதாரணமாக வேக்சிங் என்பது வலி மிகுந்ததாகவும் அதே நேரத்தில் லேசர் யாரோ நம்மை கிள்ளுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 

இந்த நிலையில் நாம் சோஷியல் மீடியாவுக்கு தான் இப்போது நன்றி சொல்ல வேண்டும். தேவையில்லாத முக முடியில் இருந்து விடுபடுவதற்கு பல்வேறு ஹேக்குகள் அவற்றில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு ஒரு மாவு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாவை முகத்தில் தேய்த்தாலே முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றி விடலாம். அந்த ரெசிபியை கேட்டால் இன்னும் ஆச்சரியப்பட்டு போவீர்கள். கோதுமை மாவு, மஞ்சள், நெய் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஒரு மாவாக பிசைந்து அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இந்த ஹேக் வேலை செய்யுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம், மேலும் இது பாதுகாப்பானதா என்றும் நீங்கள் யோசிக்கலாம். 

ஆனால் தற்போது வைரல் ஆகி வரும் இந்த மாவு ஹேக் பாரம்பரிய வீட்டு சிகிச்சைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது நமது சருமத்திற்கு லேசான நன்மைகளையும் தருகிறது. அதே நேரத்தில் இதனை வழக்கமான முறையில் நீங்கள் செய்வதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை கருத்தில் கொள்வதும் அவசியம். முகத்திற்கு இந்த மாவை பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கான தற்காலிக விளைவுகளை கொடுத்தாலும் இதில் ஒரு சில ரிஸ்க்குகளும் அடங்கியுள்ளது. 

இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி பேசும்பொழுது கோதுமை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி மென்மையான ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. அதே நேரத்தில் மஞ்சளில் உள்ள வீக்க எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக சருமத்தை ஆற்றி, முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை லேசாக எக்ஸ்ஃபோலியேட் செய்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. 

இதையும் படிக்கலாமே: பசியே எடுக்க மாட்டேங்குதுன்னு புலம்புறவங்களுக்கான டிப்ஸ்!!!

நெய் என்பது மாய்சரைசர் வேலையை செய்து, சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. இந்த பொருட்கள் அனைத்துமே நம்முடைய கலாச்சாரத்தில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வருபவை. மேலும் இவை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. ஆனால் இதன் மூலமாக ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். 

கோதுமை மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாக செயல்பட்டாலும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மேலும் மஞ்சளில் உள்ள வலிமையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆனால் இதன் காரணமாக சருமத்தில் எரிச்சல் அல்லது அலர்ஜியும் ஏற்படலாம் .நெய்யானது சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கினாலும் இது சருமத்தில் உள்ள துளைகளில் அடைப்பு ஏற்படுத்தலாம். 

மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி விடக்கூடும். ஆகவே இதனை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல யோசனையாக இருக்காது. இந்த ஹேக்கை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் சரும துளைகளை சுத்தம் செய்து முடி வேர்களை வழிவிழக்கச் செய்து நாளடைவில் அது உதிர்ந்து போக உதவுகிறது. எனினும் தொடர்ச்சியாக இதனை செய்வது சருமத்தில் சிவத்தல் மற்றும் அதிக முடி வளர்ச்சியை ஏற்படுத்தலாம். மேலும் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் இந்த ஹேக்கை பயன்படுத்த வேண்டாம். ஏதாவது ஒரு அவசரகால சூழ்நிலையில் இந்த ஹேக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வழக்கமான அல்லது நீண்ட கால பயன்பாட்டிற்கு இது பரிந்துரைக்கப்படவில்லை.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Harish Kalyan new Pan India movie ஹரிஷ் கல்யாணுடன் இணையும் பாலிவுட் நடிகர்..ஆஹா மஜா கூட்டணியா இருக்கே ..!
  • Views: - 91

    0

    0

    Leave a Reply