காரில் சிக்கிய மூன்று சிறுவர்கள்.! மூச்சுத்திணறி பலியான பரிதாபம்.!!

7 August 2020, 1:44 pm
Andhra Child dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : கிருஷ்ணா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிய 3 சிறுவர் சிறுமிகள் மூச்சு திணறி காருக்குள் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபாளையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் மூன்று சிறுவர்-சிறுமிகள் ஏறி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கார் கதவு மூடிக்கொண்ட நிலையில், காரின் கண்ணாடிகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தன.

எனவே சுமார் மூன்று மணி நேரம் கதவை திறக்க முடியாத நிலையில் இருந்த மூன்று பேரும் கார் கண்ணாடிகளை உடைத்து வெளியில் வர முயற்சித்ததாக தெரியவருகிறது. ஆனால் அவர்களால் கார் கண்ணாடிகளை உடைக்க இயலவில்லை.

இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று மணிநேர கடும் உயிர் போராட்டத்திற்கு பின் மூன்று பேரும் காருக்குள்ளேயே பரிதாபமாக மரணம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் மரணமடைந்த பர்வீன், யாஸ்மின், சுல்தானா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். காரில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்த மூன்று பேரும் ஆறு வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0