பாஜக நிர்வாகி திடீர் கைது… அடுத்தது பாஜக தலைவருக்கு குறி? காங்கிரஸ் புகாரில் தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 1:59 pm
siddha
Quick Share

பாஜக நிர்வாகி திடீர் கைது… ஜே.பி நட்டாவுக்கு குறி? காங்கிரஸ் புகாரில் தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

கடந்த மாதம் 26ஆம் தேதி மற்றும் கடந்த 7ஆம் தேதி என தலா 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அனிமேஷன் வீடியோவை வெளியிட்டது.

அந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியி்ல எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதி, சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்குவதாக கூறி உள்ளது என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இருந்தன.

மேலும் படிக்க: சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மினி டெம்போ மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட ஷாக் VIDEO!

இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கர்நாடகா சமூக வலைதள பிரிவு கன்வீனர் பிரசாந்த் மகனூரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அவர் போலீஸ் நிலையத்தின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவுரையின் படி அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜேபி நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மனை அழுப்யி போலீசார், சம்மன் கிடைத்த 7 நாட்களில் காலை 11 மணிக்கு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜேபி நட்டா கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 158

0

0