வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி : வாழ்த்துக்களை தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்!!

Author: Udayachandran
5 August 2021, 10:42 am
Hockey Won Wish - Updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்கு பிறகு வெண்கலம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா – ஜெர்மனி அணிக்கு இடையேயான ஆடவர் ஹாக்கி அணி போட்டியில் இந்திய வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பதிவில், சரித்தர சாதனை ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் நீங்கா இடம்பெற்ற நாளாக இது அமைந்துள்ளது என்றும், நமது ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று நமது நாட்டுக்கு எடுத்து வருவதற்கு வாழ்த்துக்கள் என்றும், இந்திய ஹாக்கி அணியால் நமது நாடே பெருமை கொள்கிறது என பாராட்டியுள்ளார்.

இதே போல காங்கிரஸ் எம்பி, இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள் என்றும் உங்கள் சாதனையால் பெருமை அடைகிறது என்றும் இது அவசியம் கிடைக்க வேண்டிய வெற்றி என வாழ்த்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஆக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்கியோ 2020 இல் இந்த வெற்றியுடன், இந்திய ஆக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. என கூறியுள்ளார்.

Views: - 245

1

0