ஒன்றே கால் லட்சம் “ரகுபதி லட்டுக்கள்”..! ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் விநியோகம்..!

5 August 2020, 8:50 am
laddoo_updatenews360
Quick Share

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. ஆம், ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. 
இந்நிலையில் பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை இன்று ராமர் கோவிலின் பூமி பூஜை நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டுக்கள்’ஐ விநியோகிக்க உள்ளது. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், 51,000 லட்டுக்கள் கோயிலின் அஸ்திவார விழாவை முன்னிட்டு ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். 

இது தொடர்பாக பேசிய மகாவீர் மந்திர் அறங்காவலர் ஆச்சார்யா கிஷோர் குணால், “அயோத்தியில் பூமி பூஜை நிகழ்ச்சியில், ‘ரகுபதி லட்டு’ என்ற பெயரில் 1,25,000 லட்டுக்கள் விநியோகிக்கப்படும். 51,000 லட்டுக்கள் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

“மீதமுள்ள லட்டுக்கள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறந்த இடத்திலும், ராமரின் கால் தடம் பதிந்ததாக நம்பப்படும் சுமார் 25 புனித இடங்களில் உள்ள கோவில்களுக்கும் அனுப்பப்படும். 

மேலும் இன்று பீகாரின் பல்வேறு பகுதிகளில் ராமர் மற்றும் அனுமனின் பக்தர்களிடையே வெவ்வேறு பகுதிகளில் லட்டுக்கள் விநியோகிக்கப்படும். இந்த லட்டுக்கள் தூய பசுவின் நெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.” என்று குணால் மேலும் கூறினார்.

பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை ஏற்கனவே ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ 2 கோடி நன்கொடை அளித்துள்ளதாகவும், இது ராமர் கோவில் கட்டுமானத்திற்காக மொத்தம் ரூ 10 கோடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார். “நாங்கள் அயோத்தியில் ராமரின் பக்தர்களுக்கு இலவசமாக ராம் ரசோய் நடத்துகிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

ஆச்சார்யா கிஷோர் குணாலுக்கும் அயோத்தியில் பூமி பூஜை விழாவில் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0