டெல்லியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்: கடந்த 24 மணி நேரத்தில் 1.6 லட்சம் தடுப்பூசிகள்!!

4 July 2021, 9:00 am
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 738 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அவர்களில் 1,30,487 பேர் முதல் டோசும், 30,251 பேர் 2வது டோசும் போட்டு கொண்டனர்.

Corona_Delhi_UpdateNews360

இதுவரை மொத்தம் 82 லட்சத்து 12 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன என தெரிவித்து உள்ளது. இதுபோக இன்னும் 2 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவற்றில் 2.68 லட்சம் கோவேக்சின் மற்றும் 2.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

Views: - 146

0

0