ஆந்திராவில் ₹10 கோடி மதிப்பிலான செம்மரம் கடத்தல் : தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் கைது!!

2 July 2021, 2:02 pm
Rosewood Seized 1- Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் மாவட்டத்தில் 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட தமிழக எல்லைப்பகுதியான குடிவாடா பகுதியில் ஆந்திரா போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான காரில் வந்த 7 பேரை பிடித்து விசாரித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் 6 செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி நகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் உள்பட திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்த 6 பேரையும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் ஒரு குடோனில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தெரிவித்த இடத்தை ஆய்வுசெய்த ஆந்திர மாநில போலீஸார் 10 கோடி மதிப்பிலான 12 டன்கள் எடை கொண்ட 356 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஊரடங்கு காரணங்களில் இவர்கள் செம்மரம் வெட்ட எப்படி ஆந்திர மாநிலத்திற்கு வந்தது பதுக்கி வைத்தது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 129

0

0