இந்தியாவுக்குள் ஆயுதம் கடத்தல்..! பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ராஜஸ்தான் நீதிமன்றம்..!

26 August 2020, 12:17 pm
Court_UpdateNews360
Quick Share

சீக்கிய பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவுக்கு வழங்குவதற்காக பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை கடத்தியதற்காக 10 பேருக்கு, ராஜஸ்தானின் பார்மரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் விதித்ததோடு மட்டுமல்லாமல் அபராதமும் விதித்தது. குற்றவாளிகளில் வெடிபொருட்களின் பொருட்களை சேகரிக்க பார்மருக்கு வந்த ஒரு பப்பர் கல்சா உறுப்பினரும் அடங்குவார்.

ஆயுதச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பத்து பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பப்பர் கல்சாவுக்கு வழங்குவதற்காக பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு வெடிபொருட்களை கொண்டு வந்ததாக பார்மர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி வமிதா சிங் தெரிவித்தார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு ஒரு சட்டவிரோத அமைப்பை உருவாக்கி வெடிபொருட்களை கடத்தி உதவியுள்ளனர்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

2009’ல் அலியா கான் மற்றும் ஃபோடியா கான் உள்ளிட்ட 6 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் மற்றும் மூன்று பப்பர் கல்சா உறுப்பினர்கள் ஹர்ஜோத் சிங், பர்மாஜித் சிங் மற்றும் ஜக்மோகன் சிங் உட்பட 14 பேர் மீது பார்மர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

செப்டம்பர் 8, 2009 அன்று பார்மர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் சோதனையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், 9 கிலோ ஆர்.டி.எக்ஸ், ஒரு டைமர் சாதனம், 3 டெட்டனேட்டர்கள், 910 தோட்டாக்கள் மற்றும் வேறு சில பொருட்கள் மீட்கப்பட்டன .

இதையடுத்து பப்பர் கல்சாவைச் சேர்ந்த ஜக்மோகன் சிங் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள நான்கு பேருக்கு எதிரான விசாரணை, அவர்கள் இந்தியாவுக்கு வெளியே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0