ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்..! பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்..! ஆந்திராவில் பரபரப்பு..!

3 August 2020, 3:55 pm
Clashes_in_Andhra_Pradesh_UpdateNews360
Quick Share

குண்டூர் மாவட்டத்தின் நடேண்ட்லா மண்டலில் உள்ள சிருமாமில்லா கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கட்டா திவ்யாவின் வீடு ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்த மார்ச் மாதம் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த திவ்யா உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வாபஸ் பெற சொல்லி, ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் கட்சியினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மிரட்டலுக்கு அடிபணியாமல் அவர் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. பின்னர் கொரோனா காரணமாக தேர்தலும் ஒத்திவைக்கப்பட்ட விட்டது.

இந்நிலையில் தொடர்ந்து திவ்யாவிற்கு ஆளும் கட்சியினர் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், திவ்ய வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்எஸ்ஆர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த  மோதலில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிகிறது. எனினும் இரண்டு தரப்பிலிருந்தும் புகார் தெரிவிக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது

எனினும் நடேண்ட்லா சப்-இன்ஸ்பெக்டர் கே.வி.நாராயண ரெட்டி, “தெருவில் வசிப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். வாகனத்தில் வந்தவர்கள் வழிவிடச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதையடுத்து இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.” எனத் தெரிவித்தார்.