கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சோகம்..!!

16 June 2021, 3:51 pm
Quick Share

அகமதாபாத்: குஜராத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த கார் இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஏழு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களின் உடல்கள் தாராபூர் பரிந்துரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்து, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

Views: - 222

0

0