திரிபுராவில் 2 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி: முதலமைச்சர் பிப்லப்குமார் தேவ் தகவல்..!!

23 June 2021, 11:10 am
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

அகர்தலா: திரிபுராவில் 2 கிராமங்களில் உள்ள அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான 2 நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், வடக்கு திரிபுரா மாவட்டம் மங்கள்காலி கிராம பஞ்சாயத்திலும், செபாகிஜலா மாவட்டம் பூர்ண சண்டிகார் கிராம பஞ்சாயத்திலும் தகுதியுள்ள அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டதாக முதலமைச்சர் பிப்லப்குமார் தேவ் தெரிவித்தார்.

இதுபோல், மாநிலம் முழுவதும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று அவர் கூறினார். அந்த 2 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அனைவரும் ஒத்துழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 174

0

0