ரூ. 100 கோடி மதிப்பில் நேதாஜிக்கு நினைவுச்சின்னம்: மேற்குவங்க அரசு அறிவிப்பு..!!

6 February 2021, 2:33 pm
memorial for nethaji - updatenews360
Quick Share

கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ரூ. 100 கோடி மதிப்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மேற்குவங்காளத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ரூ. 100 கோடி மதிப்பில் நினைவுச்சின்னம் நியூடவுன் பகுதியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி ஜெய்ஹிந்த் பவன்கள் அமைக்கப்படுகிறது. முன்னதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘சிறந்த தலைவரான நேதாஜியின் நினைவாக எந்த அரசாங்கமும் இதுவரை நமது மாநிலத்தில் நினைவுச்சின்னம் உருவாக்கவில்லை. வங்காள மக்கள் சார்பாக நியூடவுனில் ஒரு ஆசாத் ஹிந்த் நினைவுச்சின்னத்தை உருவாக்க நான் முன்மொழிகிறேன்’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0