10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி : அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்..!!

12 July 2021, 5:42 pm
12th Exam - Updatenews360
Quick Share

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் கர்நாடகா அரசின் முடிவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ மற்றும் மாநில பள்ளிகளின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், சில மாநிலங்கள் தங்களின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில் 19 மற்றும் 22ம் தேதிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா அரசின் இந்த முடிவை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவல் 1.48 சதவீதமாக குறைந்துள்ளதால், தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Views: - 133

0

0