காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து: 11 பேர் பலி…14 பேர் நிலைமை கவலைக்கிடம்..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 6:13 pm
Quick Share

ஜம்மு-காஷ்மீர்: தோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே மினிபஸ் ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

ஜம்முவில் இருந்து 165 கி.மீ., தொலைவில் உள்ள தோடா என்ற பகுதிக்கு மினிபேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

latest tamil news

பள்ளத்தில் விழுந்த மினிபஸ் சுக்குநூறாக நொறுங்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

JK, 8 Dead, MiniBus, Falls, Several Injured, காஷ்மீர், மினிபஸ், பலி, காயம்

ஏராளமானோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Views: - 206

0

0