ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி கோரவிபத்து: 11 பேர் பரிதாப பலி..!!

Author: Aarthi Sivakumar
31 August 2021, 10:51 am
Accident -Updatenews360
Quick Share

நகாவுர்: ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர 7 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்துபற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 207

0

0