ராஜ்யசபை துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்..! எதிர்க்கட்சிகள் போர்க்கொடி..!

20 September 2020, 6:56 pm
Parliament_UpdateNews360
Quick Share

இன்று ராஜ்யசபாவில் 12 எதிர்க்கட்சிகள் அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தன. இரண்டு விவசாய மசோதாக்கள் மேல் சபையில் நிறைவேற்றி அவர் சபையை ஒத்திவைத்த விதம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பை சமர்ப்பித்த கட்சிகளில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சிபிஐ, சிபிஎம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அடங்கும்.

காங்கிரஸ் தலைவர் அகமது படேல், துணைத் தலைவருக்கு எதிராக 12 கட்சிகள் நம்பிக்கையில்லா அறிவிப்பைக் கொடுத்துள்ளன என்றும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயகத்தின் படுகொலை ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஹரிவன்ஷ், பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய செப்டம்பர் 14 அன்று தான் மேல் சபையின் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையிலேயே அமர்ந்தனர்.

திரிணாமுல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பாராளுமன்ற அமைப்பையும் ஜனநாயகத்தையும் அவையின் துணைத்தலைவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

“விவசாயிகளின் மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு சோகமான நாள்” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 0

0

0