ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை பெயரில் மோசடி..! 13 பேர் மீது வழக்குப் பதிவு..!

22 August 2020, 3:25 pm
mathura_updatenews360
Quick Share

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் மதுராவி காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, மக்களை ஏமாற்றியதாக பகவதச்சார்யா உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுராவின் கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் படி, 13 பேர் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளையைப் போல் போலிப் பெயருடன் ஒரு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி நிர்மன் நியாஸ் என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்தவும், ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஸ்தானில் கட்டுமான நடவடிக்கைகளுக்காக நன்கொடைகளை சேகரிக்கவும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினர்.

இந்த மோசடி வெளியானதை அடுத்து மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் கபில் சர்மா காவல்துறையிடம் புகாரளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஸ்தானை புதுப்பித்து வரும் பணியை 1944 முதல் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மபூமி டிரஸ்ட் தான் செய்து வருகிறது என்று சர்மா தாக்கல் செய்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கையை மீறுதல்) மற்றும் 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.