சிறைக்கம்பியை அறுத்துவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதிகள்..! ஹரியானாவின் கொரோனா சிறப்பு சிறைச்சாலையில் பரபரப்பு..!

9 May 2021, 7:24 pm
Prison_UpdateNews360
Quick Share

ஹரியானாவில் உள்ள கொரோனா சிறப்பு சிறைச்சாலையில் இருந்து 13 விசாரணைக் கைதிகள் சிறைக் கம்பியை அறுத்து தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நான்கு பேர் ரேவாரி சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒன்பது பேர் மகேந்திரகரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ரேவாரியில் கட்டுமானத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தப்பியோடியவர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு தப்பித்துள்ளனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

தப்பியவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 493 கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் ரேவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை அதிகாரிகள் காலையில் கைதிகளை எண்ணியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கிடையே காவல்துறையின் நான்கு குழுக்கள் கைதிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

Views: - 123

0

0