வட கர்நாடகாவில் 13 மேம்பாலங்கள் கட்ட முடிவு..! 21000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!

16 January 2021, 6:12 pm
Nitin_Gadkari_UpdateNews360
Quick Share

கர்நாடகாவின் மிகவும் பின்தங்கிய பகுதியான வட கர்நாடகாவில் ரூ 21,000 கோடி செலவில் மொத்தம் 13 தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஹுப்பல்லியில் உயர்மட்ட காரிடாருக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அவர் கூறினார்.

ஹுப்பள்ளி-தார்வாட் புறவழிச்சாலையில் ரூ 298 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த 3.6 கி.மீ காரிடார் தேசிய நெடுஞ்சாலைகள் 63 மற்றும் 218’ஐ மும்பை மற்றும் பெங்களூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 4 உடன் இணைக்கும்.

தட்வாட் மாவட்டத்தின் கலகட்கியில் தஸ்திகொப்பா அருகே ரூ 25 கோடி செலவில் கட்டப்படவுள்ள 2.8 கி.மீ 4 வழிச் சாலை மற்றும் ஒரு சிறிய பாலம் ஆகியவற்றிற்கும் கட்கரி அப்போது அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய அவர், நகரத்தில் வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெலகாவியில் 4 வழிச் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

“ஹம்பியில் உள்ள உலகின் பாரம்பரிய தளத்துடன் சிறந்த இணைப்பை உறுதி செய்வதற்காக மாநிலத்தின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ஹுப்பல்லி மற்றும் ஹோஸ்பேட் இடையேயான நெடுஞ்சாலை திட்டமும் விரைவில் முடிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பெங்களூரில் இருந்து வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பங்கேற்ற எடியூரப்பா, இந்த பாலங்கள் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை எளிதாக்கும் என்றார்.

Views: - 0

0

0