உதிரி பாகங்களை பயன்படுத்தி 2 டன் எடையில் 14 அடி உயர பிரதமர் சிலை : 600 மணி நேரத்தில் உருவாக்கிய தந்தை மகன்!!

By: Udayachandran
14 September 2021, 4:07 pm
Modi Statue -Updatenews360
Quick Share

ஆந்திரா : பழைய இரும்பு பொருட்களை பயன்படுத்தி 14 அடி உயர பிரதமர் மோடியின் சிலையை தந்தையும், மகனும் தயாரித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ். இவர் தனது மகன் ரவிச்சந்திரனுடன் சுமார் 600 மணி நேரம் உழைத்து உதிரிபாகங்களை வைத்து பிரதமர் மோடியின் சிலையை தயாரித்துள்ளனர்.

சைக்கிள் செயின், இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பழைய இரும்பு பொருட்கள் என சுமார் 2 டன் எடையுடைய பல்வேறு பழைய இரும்பு பொருட்களை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் 14 அடி உருவ சிலையை தயார் செய்துள்ளனர். இந்த சிலையை பெங்களூரில் காட்சிப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 153

0

0