டெல்லியில் களமிறங்கிய துணை ராணுவப் படைகள்..! கட்டுப்பாட்டைக் கையிலெடுத்தார் அமித் ஷா..!
26 January 2021, 8:53 pmடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதாகக் கூறி விவசாயிகள் அனுமதி வாங்கி, கடும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த டெல்லி முழுவதும் 15 கம்பெனி துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லி போலீஸ் கமிஷனரின் வேண்டுகோளைத் தொடர்ந்து துணை ராணுவப் படைகளின் கூடுதல் கம்பெனிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே வன்முறையில் ஈடுபடும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் மூத்த பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தி, நகரத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை தானே நேரடியாக கையில் எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையில், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் பல பகுதிகளிலும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது வன்முறைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு பல விவசாயிகள் மீண்டும் டெல்லி எல்லைகளில் உள்ள தங்களின் பழைய இடத்திற்கே திரும்பி வருவதாகக் கூறப்பட்டாலும், இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் மையப் பகுதிக்குள்ளேயே இருப்பதால் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.
இதனால் துணை ராணுவப் படைகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் இன்னும் அதிக அளவில் வீரர்களை டெல்லியில் இறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
0
0
1 thought on “டெல்லியில் களமிறங்கிய துணை ராணுவப் படைகள்..! கட்டுப்பாட்டைக் கையிலெடுத்தார் அமித் ஷா..!”
Comments are closed.