பஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 15 அமைச்சர்கள் பதவி ஏற்பு

Author: Udhayakumar Raman
26 September 2021, 9:51 pm
Quick Share

பஞ்சாப்: பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரைவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 15 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, தனது முதலமைச்சர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை, கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தது, மாநில அரசியலில், புயலைக் கிளப்பியது. இதை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சங் சன்னி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன், இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே, மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சி மூத்தத் தலைவர்களுடன், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

அதில் பஞ்சாப் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி இன்று 15 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். அவர்களுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் பிரம் மொகிந்திரா, மன்பிரீத் சிங் பாதல், ராஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்க்காரியா, ராணா குர்ஜித் சிங், அருணா சவுத்ரி, ரஜியா சுல்தானா, பாரத் பூஷன், விஜய் இந்தர் சுக்லா, ரந்தீப்ச் இக் நபா, ராஜ்குமார் வெர்கா, சங்கீத் சிங் கில்ஜியான், பர்கத் சிங், ராஜாவ்ரிங், குக்ரித் சிக் கோட்லி ஆகியோர் ஆவார்கள். இவர்களில் பிரம் மொகிந்திரா, பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார். அமரீந்தர் சிங்கிற்கு முன்னர் கட்சியில் இணைந்தவர். அமரீந்தர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தவிர நபா, வெர்கா, கில்ஜியான், பர்கத் சிங், வரீங் மற்றும் கோட்லி ஆகியோர் புதிதாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.

Views: - 97

0

0