இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்..! 17 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

1 August 2020, 11:06 am
corona virus new 8- updatenews360
Quick Share

 டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்க உள்ளது.

உலகையே இன்னமும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்த நோய் தொற்றால் அதிக சேதாரம் அமெரிக்காவுக்குதான். அதற்கு அடுத்து பிரேசில், இந்தியா.

இந்தியாவில் கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தில் தான் இருக்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் ஏற்கனவே இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந் நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கிவிட்டது.

நாட்டில் கொரோனாவால் மொத்த எண்ணிக்கை 16,38,870 என்று இருந்தது. இது இப்போது 16,95,988 ஆக உயர்ந்துவிட்டது. விரைவில் 17 லட்சத்தை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 10,57,394லிருந்து 10,95,647 ஆக  உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747லிருந்து 36,511 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக 57,118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது, கவலையளிக்க கூடிய ஒன்று என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

Views: - 0

0

0