பாராளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர்..! 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

14 September 2020, 3:35 pm
Corona_Mask_UpdateNews360
Quick Share

பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், குறைந்தது 17 எம்.பி.க்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தோற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், ஜூலையில் தொடங்க வேண்டிய மழைக்காலக் கூட்டத்தொடர் கால தாமதமாக இன்று தொடங்கியுள்ளது. மேலும் அக்டோபர் 1’ஆம் தேதியுடன் முடித்து வைக்கப்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தின் காரணமாக இன்று தொடங்கப்படும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முறையாக சமூக இடைவெளி மற்றும் சானிட்டைசர் பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையில் வெளியான தகவலின் அடிப்படையில், 17 எம்பிக்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட எம்பிக்கள் :

 • மீனாட்சி லேகி
 • அனந்த் குமார் ஹெக்டே
 • பர்வேஷ் சாஹிப் சிங்
 • சுக்பீர் சிங்
 • ஹனுமான் பெனிவால்
 • சுகனாதா மஜும்தார்
 • கோடெட்டி மாதவி
 • பிரதாப் ராவ் ஜாதவ்
 • ஜனார்தன் சிங்
 • பித்யுத் பரன்
 • பிரதான் பருவா
 • என் ரெட்டெப்பா
 • செல்வம் ஜி
 • பிரதாப் ராவ் பாட்டீல்
 • ராம் சங்கர் கதெரியா
 • சத்ய பால் சிங்
 • ரோட்மல் நகர்

இதையடுத்து இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற வளாகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 0

0

0