இளைஞருடன் உல்லாசத்தால் வந்த வினை.. யூடியூப்பை பார்த்து தனக்கு தானே பிரசவம் : உறைய வைத்த 17 வயது மாணவி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 1:24 pm
Kerala Minor Girl Deliver baby-Updatenews360
Quick Share

கேரளா : யூடியூப் பார்த்து பள்ளி மாணவி ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் அருகே வசித்தும் வரும் 21 வயது இளைஞருடன் காதல் மலர்ந்தது

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்வதாக மாணவிக்கு இளைஞர் வாக்கு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறிவந்துள்ளார். இதனிடையே கர்ப்பத்தை மறைத்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செய்வதறியாத மாணவி, வீட்டில் உள்ள தனது அறையில் செல்போனில் யூடியூப் மூலம் பிரசவம் பார்ப்பது எப்படி என அறிந்து தனக்கு தானே பிரசவம் பார்த்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தையின் அழுகுரலை கேட்டு அறைக்கு வந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குழந்தையுடன் மகளையும் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து 21 வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Views: - 172

0

0