கேரளாவில் 17,681 பேருக்கு கொரோனா: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987 ஆக உயர்வு

By: Udayaraman
15 September 2021, 10:29 pm
TN Corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,987 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனாபாதிப்புகள் அதிகமாக இருந்துவருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரமாக இருந்துவந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் இன்று 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 44,24,046 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 208 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,987 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 25,558 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 42,09,746 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,90,790 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Views: - 118

0

0