19 வயது இளைஞரின் உயிரைக் குடித்த ஐபிஎல் சூதாட்டம்..!

3 November 2020, 8:39 pm
Suicide_UpdateNews360
Quick Share

கடன் வாங்கி ஐபிஎல் போட்டிகளில் பந்தயம் கட்டிய இளைஞர் ஒருவர் மொத்த பணத்தையும் இழந்ததால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறிய 19 வயது சோனு குமார் யாதவ் இன்று நகரின் புஞ்சகுட்டாவில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். பலியான சோனு குமார் யாதவ் வாடகைக்கு தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சோனு நகரில் தேங்காய் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக பஞ்சகுட்டா சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தெரிவித்தார்.

சோனு குமார் யாதவ் தனது சகோதரர் அர்ஜுன்குமார் யாதவுடன் நகரத்திற்கு குடிபெயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். சோனு குமார் பஞ்சகுட்டாவிலும், அர்ஜுன் தில்சுக் நகரிலும் வசித்து வந்தனர். ஊரடங்கு காலத்தில், விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர்கள் வீட்டிற்குச் சென்று மூன்று மாதங்களுக்கு முன்பு நகரத்திற்குத் திரும்பினர்.

இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசன் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியபோது, ​​அவர் போட்டிகளில் பந்தயம் கட்டத் தொடங்கினார். பந்தயத்தில் பங்கேற்க அவரது வருமானம் போதுமானதாக இல்லாததால், அவர் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கினார். இருப்பினும், அவர் பணத்தை இழந்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை, பாத்ரூமிற்கு சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதனால் அவரது அறை தோழர்கள் கதவை உடைத்து திறந்தபோது அவர் வென்டிலேட்டரில் இருந்து தூக்கில் தொங்கியதைக் கண்டு அவரது சகோதரர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது கடன்கள் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஐபிஎல் சூதாட்டத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து இது நடந்து கொண்டிருப்பதும், இதனால் உயிர்கள் பலியாவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. சூதாட்டத்தை நடப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 25

0

0

1 thought on “19 வயது இளைஞரின் உயிரைக் குடித்த ஐபிஎல் சூதாட்டம்..!

Comments are closed.