ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடரும் உயிரிழப்புகள்: பெங்களூருவில் மேலும் 2 பேர் பலி..!!

4 May 2021, 8:48 am
oxygen_cylinder_updatenews360
Quick Share

சாம்ராஜ் நகர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மேலும் 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நேற்று கொரோனா நோயாளிகள் உள்பட 24 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துவிட்டதாக புகார் எழுந்தது. இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஒரு புறம், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமே நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 82

0

0