2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…!!

6 November 2020, 5:48 pm
kashmir-encounter-updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

kashmir - updatenews360

இருப்பினும், தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டர் நீடித்தது. இதில், இன்று மாலை 4 மணியளவில் மற்றொரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். இதனால், காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Views: - 21

0

0