உத்தரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம்…!!

22 November 2020, 1:00 pm
accident - updatenews360
Quick Share

உன்னாவ்: உத்தரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 82 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து சிர்தார்பூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 23

0

0