ஒரே நேரத்தில் டெல்லி போலீசில் 200 பேர் ராஜினாமாவா..? பதறவைத்த பதிவு..! உண்மை என்ன..?

30 January 2021, 7:12 pm
Delhi_Police_UpdateNews360
Quick Share

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் டெல்லியின் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்து வருகிறது. பல விவசாயிகள் எல்லைகளை காலி செய்துள்ள நிலையில், சிலர் வெளியேற மறுக்கின்றனர். 

இதற்கிடையே ஜனவரி 26 வன்முறை டெல்லியில் சோகமான  வடுவை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியின் போது போலீசாருடன் மோதினர். 

டிராக்டர்களை ஓட்டி, எதிர்ப்பாளர்கள் பலர் செங்கோட்டையை அடைந்து நினைவுச்சின்னத்திற்குள் நுழைந்தனர். சில எதிர்ப்பாளர்கள் மதக் கொடிகளை அதன் குவிமாடங்கள் மற்றும் கோபுரங்களில் கூட ஏற்றி வைத்தனர். அங்கு சுதந்திர தினத்தன்று பிரதமரால் தேசியக் கொடி ஏற்றப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் சமூக விரோத நபர்களை களையெடுக்க, அரசாங்கம் சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லை மற்றும் அவற்றின் அருகிலுள்ள பகுதிகளில் ஜனவரி 31 வரை இணைய சேவைகளை நிறுத்தியுள்ளது. 

இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பின் மத்தியில் சுமார் 200 போலீசார் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ததாக சமீபத்திய சமூக ஊடக பதிவு ஒன்று கூறியது. ஆனால், அது உண்மையா?

200 போலீசார் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த தகவல்கள் போலியானவை என்று அரசாங்கத்தின் மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகம் உண்மை சோதனை பிரிவு தெரிவித்துள்ளது.

Views: - 30

0

0