உத்தரகாண்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு: 200 பேர் மீட்பு…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!

Author: Aarthi Sivakumar
24 August 2021, 9:35 am
Quick Share

உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை பேரிடர் படையினர் மீட்டுள்ளது.

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்திற்கு அருகில் உள்ள தாமஸ் பகுதியில் நேற்று திடீரென அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்பு படை சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை மீட்டு வெளியேற்றி உள்ளது.

அதேபோல் உத்தரகாண்டில் தனக்பூர்-சம்பவாத் தேசிய நெடுஞ்சாலை சம்பவாத்தில் சுவாலா அருகே ஏற்பாட்டை நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை முற்றிலும் மூடப்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து மாநில பேரிடர் பொறுப்பு படை சம்பவ பகுதிக்கு சென்றது. அந்த குழு, நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை மீட்டு வெளியேற்றி உள்ளது. மேலும் இந்த நிலச்சரிவை அகற்ற குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பிவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று டிஎம் வினீத் தோமர் கூறுகிறார்.

Views: - 260

1

0