200 பேர் கைது..! 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..! டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..!

27 January 2021, 3:19 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது. 

“நகரில் நேற்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை டெல்லி போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் ”என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். 

குறிப்பிடத்தக்க வகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, இன்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உயர் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுளளது. 

முன்னதாக நேற்று, விவசாயிகள் செங்கோட்டையை அடைந்து, உழவர் சங்கக் கொடிகளையும், சீக்கிய கொடியையும் அதன் கோபுரங்களிலிருந்து நேற்று அசைத்தனர். பின்னர் அவர்கள் உழவர் சங்கக் கொடிகளையும், சீக்கியக் கொடியையும் ஒரு கொடிக் கம்பத்தில் ஏற்றினர்.

இதற்கிடையே விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக, போலி பதிவுகளை வெளியிட்ட 300’க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வன்முறையைத் தூண்டிவிட, பாகிஸ்தான் உளவுத்துறை புதிதாக 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை உருவாக்கியதாக உளவுத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை உள்ளது.

இதற்கிடையே டெல்லி வன்முறை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு, உளவுத்துறை மற்றும் டெல்லி போலீசாருக்கு அமித் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “200 பேர் கைது..! 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..! டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..!

Comments are closed.